இன்று 141-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சுகாதாரத்தில் முதலிடம் பெற்ற கும்பகோணம் ரயில் நிலையம்: கூடுதல் வசதிகள் செய்யப்படுமா?
THE HINDU TAMILகடந்த ஆண்டு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அகில இந்திய அளவில் சுகாதாரமான ரயில் நிலையங்கள் பட்டியலில் இந்திய அளவில் 5-வது இடத்தையும், தென்னக ரயில்வே அளவில் முதலிடத்தையும் பெற்ற கும்பகோணம் ரயில் நிலையம் இன்று 141-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கடந்த 15.2.1877-ம் ஆண்டு தஞ்சாவூர்- மயிலாடுதுறை இடையே ரயில் பாதை அமைக்கப் பட்டு அதில் முதல் ரயில் விடப்பட் டது. அப்போது கும்பகோணத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் ஆன்மிக பிரச்சாரத்துக்காக 1897 ஜனவரி 26-ம் தேதி கும்பகோணத்துக்கு ரயி லில் வந்து 3 நாட்கள் தங்கி பிரச் சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தான், அவரது தாரக மந்திரமான, ‘எழுமின், விழுமின், கருதிய கருமம் கைகூடும்வரை உழைமின்’ என்ற பொன்மொழி கும்பகோணம் மண்ணில்தான் உதிர்க்கப்பட்டது.
கும்பகோணம் வழியாக செல் லும் இந்த ரயில் பாதை மெயின் லைன் என அழைக்கப்படுகிறது. இந்த வழியாகத்தான், போட் மெயில் என்றழைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை இயக்கப்பட்டது.
மெயின் லைன் வழித் தடத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் ரயில் நிலையமாகவும், ‘ஏ’ கிரேடு அந்தஸ்து பெற்ற கும்பகோணம் ரயில் நிலையம், சுகாதாரத்தைப் பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகித்தாலும் மேலும் பல்வேறு வசதிகள் தேவை என்கின்றனர் பயணிகள்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்க துணைத் தலைவர் கிரி கூறியபோது, “இங்கு 24 ரயில் பெட்டிகள் நிற்கும் அள வுக்கு பிளாட்பாரங்களை நீட்டிப்பு செய்ய வேண்டும். ரயில் யாத்ரி நிவாஸ் கட்ட வேண்டும். தஞ்சாவூர்- விழுப்புரம் இடையே இருவழி அகல ரயில் பாதை அமைக்க வேண்டும். பகல் நேரங்களில் திருச்சி- மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். ரயில் பெட்டிகள் பராமரிப்பு முனையம் அமைக்க வேண்டும். மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி தற்போது நிறுத்தப்பட்ட செங்கோட்டை பாசஞ்சர், ஜனதா விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment