Wednesday, February 1, 2017

ஏசி' இல்லாமல் பேருந்து இயக்கம்

சென்னை;'ஏசி' பேருந்துக்கு பதிலாக, சாதாரண பேருந்து இயக்கிய, டிராவல்ஸ் நிறுவனம், பயணிக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், திருவான்மியூர், செல்வ நகரைச் சேர்ந்த, ஜெயசுதா தாக்கல் செய்த மனு:
கடலுாரில் நடந்த, என் உறவினரின் திருமண விழாவுக்கு செல்வதற்காக, பெங்களூரு, ரெட் பேருந்து நிறுவனத்தின், வால்வோ 'ஏசி' பேருந்தில், பயணம் செய்ய, கோயம்பேட்டில் உள்ள, யுனிவர்சல் டிராவல்சில் முன்பதிவு செய்தேன். நான்கு இருக்கைகளுக்கு, 1,900 ரூபாய் கட்டணம் செலுத்தினேன்.திருவான்மியூருக்கு, காலை, 6:15 மணிக்கு பேருந்து வர வேண்டும்; ஆனால், 7:30 மணிக்கு, சாதாரண பேருந்து வந்தது.'ஏசி' பேருந்தில், திடீர் கோளாறு ஏற்பட்டு விட்டது. கட்டணத்தை, கோயம்பேடு அலுவலகத்தில் வாங்கிக் கொள்ள லாம் என்றனர்.மூன்று நாட்களுக்கு பிறகு, கோயம்பேடு அலுவலகத்தில் கேட்டதற்கு, கட்டணத்தை தர மறுத்து விட்டனர்.

இதனால, மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு டிக்கெட் கட்டணத்துடன், இழப்பீடும் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.விசாரணையில், 'சில கட்டுப்பாடுகளுடன் தான், பயண டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன்படி, பயண கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டியதில்லை.'பயணியின் மீதுள்ள நல்லெண்ணத்தில், 400 ரூபாய், அலுவலகத்தில் வாங்கிக் கொள்ள தெரிவித்தோம்; வந்து, வாங்கவில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, டிராவல்ஸ் நிறுவனம்வாதிட்டது.

இந்த வழக்கில், நீதிபதி ஜெ  யபாலன், நீதித்துறை உறுப்பினர் கலையரசி பிறப்பித்த உத்தரவு:டிராவல்ஸ் நிறுவனம், உரிய சேவை வழங்காததால், மனுதாரர் சிரமப்பட்டுள்ளார்.டிக்கெட் கட்டணம், 400 ரூபாயுடன், இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவு, 5,000 ரூபாயும், ஆறு வாரத்திற்குள் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024