Wednesday, February 1, 2017

பதில் அளிக்க அமைச்சர்கள் தடுமாற்றம் : சட்டசபையில் சிரிப்பலை

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு, யார் பதில் அளிப்பது என தெரியாமல், அமைச்சர்கள் தடுமாறியதால், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விருகை ரவி, ''விருகம்பாக்கம் தொகுதியில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா,'' என, கேள்வி எழுப்பினார். பதில் அளித்த, அமைச்சர் பாண்டியராஜன், ''மாநகராட்சியில் இடம் பெற்று தந்தால், உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும்,'' என்றார்.

அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, ''வர்தா புயலின் போது, ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை ஆங்காங்கே, விளையாட்டு திடல்களில் குவித்து வைத்துள்ளனர். இதனால், மாணவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; அவற்றை அகற்ற, அரசு நடவடிக்கை எடுக்குமா?'' என, கேட்டார்.இதற்கு யார் பதில் அளிப்பது என தெரியாமல், விளையாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜனும், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியும் தடுமாறினர். ஒருவரை ஒருவர் பதில் கூறும்படி கூறியதால், சபையில் சிரிப்பலை எழுந்தது. சபாநாயகர் தனபால், 

''இரண்டு அமைச்சர்களில், யாராவது ஒருவர் பதில் கூறுங்கள்,'' என்றார்.அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''டெண்டர் விடப்பட்டு, விளையாட்டு திடலில் குவித்து வைக்கப்பட்டுள்ள, மரங்களை அகற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மரங்கள் அகற்றப்படாமல் உள்ள இடத்தை குறிப்பிட்டு சொன்னால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024