அதிமுகவிலிருந்து இன்று நீக்கப்படுகிறார் ஓ.பன்னீர் செல்வம்!
இந்த நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக தீர்மானம் போடப்படும் என்றும், அவரை கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தி தீர்மானம் போடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: அதிமுகவிலிருந்து இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு முறைப்படி அதிமுக உடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். இன்று கார்டனையே அசைத்துப் பார்த்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம். அவர் இப்படி மாறுவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரும் மிரண்டு போயுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவே ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியை பறித்து விட்டார் சசிகலா. ஆனால் அது எனக்கு ஜெயலலிதா கொடுத்த பதவி. அதைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக தீர்மானம் போடப்படும் என்றும், அவரை கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தி தீர்மானம் போடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஓ.பி.எஸ். கட்சியை விட்டு நீக்கப்பட்டால் அதிமுக முறைப்படி உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ஆதரவாக பல முக்கிய நிர்வாகிகள் திரண்டு வருகின்றனர். கட்சியை விட்டு அவர் நீக்கப்பட்டால் மேலும் பலர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் ஓ.பி.எஸ் பக்கம் உள்ளனர் என்பது முக்கியமானது.
source: oneindia.com
No comments:
Post a Comment