சசிகலாவின் பதவி ஆசையால் அரசு பணிகள் எல்லாம் முடக்கம்
முதல்வராக முடியாது : தினமும் காலை, தலைமைச் செயலகம் வந்து, கோப்புகளை பார்த்தார். தன்னை சந்திக்க விரும்புவோரை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டார்; இரவு வரை பணி செய்தார். விடுமுறை நாளிலும் பணி செய்தார். இதே நிலை நீடித்தால், தன்னால் முதல்வராக முடியாது என்பதை உணர்ந்த சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வத்திடம், பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தினார். 5ம் தேதி, அவரை போயஸ் தோட்டத்துக்கு அழைத்து, பதவியை ராஜினாமா செய்ய வைத்தார். பின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சசிகலாவை, சட்டசபை கட்சி தலைவராக, தேர்வு செய்தனர்.
தற்போது, அவர் மீதுள்ள வழக்கு காரணமாகவும், பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு காரணமாகவும், அவர் முதல்வராக பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த, முதல்வர் பன்னீர்செல்வத்தை, தன் சுயநலத்திற்காக, திடீரென ராஜினாமா செய்ய வைத்ததால், அரசு பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன.
அதிகாரிகள் அமைதி : பதவியை துறந்த பன்னீர்செல்வம், தலைமைச் செயலகம் வருவதில்லை; அமைச்சர்களும் வரவில்லை. எனவே, கோப்புகள் தேக்கமடைந்துள்ளன. மேலும், சசிகலா தலைமையிலான புதிய அமைச்சரவையில், யாருக்கு எந்த துறை வழங்கப்படும் என்பது தெரியாததால், அதிகாரிகள் அமைதியாகி விட்டனர். மத்திய பட்ஜெட் தாக்கலான நிலையில், தமிழக பட்ஜெட் தயாரிக்க வேண்டும். ஆனால், அரசு நிர்வாகம் முடங்கியதால், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. தமிழகம், வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டாலும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, மத்திய அரசிடம் நிதி பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே, தடுப்பணைகளை கட்டி வருகிறது. அதை தடுக்க, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதிதாக கட்டப்பட்ட, அரசு கட்டடங்கள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளன. அடுத்த முதல்வர் எப்போது பதவியேற்பார்; அரசு எப்போது செயல்படத் துவங்கும் என்பது தெரியாமல், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
- நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment