Sunday, September 17, 2017

அசுரவேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள் பதறுது மனசு:தினம் தினம் நடக்குது பெரும் விபத்துக்கள்
பதிவு செய்த நாள்16செப்
2017
23:18


ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்வதால், பொதுமக்கள் மற்றும் டூவீலர் ஓட்டிகள் விபத்தில் சிக்கி, உடல் ஊனம் அடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகாசி, அருப்புகோட்டையிலிருந்து மதுரைக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. மேலும், தென்காசி, திருநெல்வேலி, தேனிக்கும் தனியார் பஸ்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அரசு பஸ்களை விட கட்டணம் குறைவு, குறைந்த நேர பயணம் என்பதால் அதிகளவில் பயணிகள் தனியார் பஸ்களுக்காக காத்திருந்து பயணிக்கின்றனர்.இதில் போட்டி இல்லாத வழித்தடங்கள் மற்றும் கிராம வழித்தடங்களின் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று,
பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர். ஆனால், மதுரையிலிருந்து ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை வழித்தடங்களில் அரசு பஸ்களுடன் போட்டிபோட்டு வருவாயை தனியார் பஸ்கள் பெறுகின்றன.அரசு பஸ்களுடன் ஒப்பிடுகையில் தனியார் பஸ்கள்
சுத்தமாகவும், இருக்கைகள் மற்றும் ஜன்னல்கள் பழுதில்லாமல் இருப்பதும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதனால் நாளுக்குநாள் தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரம் தங்களுடைய வருவாயை பெருக்கும் வகையில் அதிவேகங்களில் தனியார் பஸ்கள் செல்வது பயணிகளுக்கு ஒருவித விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. எதிர்திசையில் வரும் வாகனங்களும் அதிவேகமாக வந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயமே உள்ளது. தற்போது மாவட்டத்தில் ஒவ்வொரு வழித்தடத்திலும் தினமும் பல சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதில் பலர் காயமடைந்து உடல்ஊனமடைந்தும், பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

திட்டமிடல் அவசியம்அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியில் விபத்தில்லா நிலையை ஏற்படுத்த அரசு நிர்வாகம் சரியான திட்டமிடல் மிகவும் அவசியமாகும். பஸ் ஊழியர்கள் கூறுகையில், 'முன்பு மதுரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தான் ராஜபாளையம், சிவகாசி, அருப்புகோட்டைக்கு பஸ் புறப்படும். தற்போது மாட்டுதாவணியிலிருந்து புறப்படுவதால் துாரம் அதிகரித்தநிலையில், போதிய இயக்கநேரம் வழங்கப்படாமல் இரு நகரத்தின் பஸ் ஸ்டாண்ட்களை தொட்டு வரும் நிலையில் தனியார் பஸ்கள் இயங்குகிறது.ஏதாவது ஒரு இடத்தில் காலதாமதம் ஏற்பட்டால் கூட அரசு பஸ் நிர்வாகங்கள் எங்களை டிக்கெட் ஏற்ற அனுமதிப்பதில்லை. எனவே தான் கூடுதல் வேகத்தில் மிகவும் கவனத்துடன் பயணிக்கிறோம். நேரங்களை மாற்றியமைத்து போதிய ஓய்வு நேரங்கள் கொடுத்து பஸ்களை இயக்கினால் மட்டுமே விபத்தில்லாநிலையில் பயணிக்கமுடியும்,'என்கின்றனர்.அரசு நிர்வாகம்தான் தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுபடுத்தி, விபத்தில்லா நிலையை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்பது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தேவையாகுது ஓய்வு

ஸ்ரீவில்லிபுத்துார் ரவிந்திரநாத், ''குறைந்த கட்டணம், விரைவுபயணம், பழுதில்லாத இருக்கை வசதிகள் இருப்பதால் தனியார் பஸ்களை விரும்பி பயணிக்கின்றனர். போதியநேரம் இல்லாததால் பஸ்கள் அதிவேகத்தில் பயணிக்கிறது. எதிரில் வரும் டூவீலர் ஓட்டிகள் மற்றும்நடந்துசெல்வோர் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை, தரமில்லாத ரோடு ஆகியவை நாளுக்குநாள் விபத்தினை அதிகரிக்கிறது. தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுபடுத்த, அப்பஸ்களுக்கு ஒரு டிரிப்பிற்கும் மற்றொரு டிரிப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் ஒருமணிநேரம் ஓய்வு கொடுத்து பஸ்களை இயக்கினால், தனியார் பஸ்களினால் ஏற்படும் விபத்து இழப்புகள் குறையும்,''என்றா

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024