Wednesday, September 20, 2017

துணை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் துவக்கம்

பதிவு செய்த நாள்19செப்
2017
21:33

சென்னை: துணை மருத்துவப் படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், 18 இடங்கள் நிரம்பின. இன்று, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, ஒன்பது துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று துவங்கியது. இந்த படிப்புகளுக்கு, 16 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 538 இடங்களும், 159 தனியார் கல்லுாரிகளில், 5,726 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. முதல் நாளான நேற்று, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில், மூன்று; மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 15 என, 18 இடங்கள் நிரம்பின. மாற்றுத்திறனாளிகள் பிரிவில், மீதமுள்ள எட்டு இடங்கள், பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. பொது பிரிவிற்கான கவுன்சிலிங், இன்று துவங்கி, அக்., 7 வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024