Wednesday, September 20, 2017

பாலியல் வழக்கு: ஆசிரியருக்கு 55 'ஆண்டு'

பதிவு செய்த நாள்19செப்
2017
22:13

மதுரை: மதுரை மாவட்டம், பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமிக்கு, 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பொதும்பு உயர்நிலை பள்ளியில், 2011ல், தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆரோக்கியசாமி, 56. இவர், 51 மாணவியர், 14 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 2011 மார்ச், 13ல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆரோக்கியசாமி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

இவர் மீதான வழக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று அளித்த தீர்ப்பு:

ஆரோக்கியசாமிக்கு, ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், 25 ஆண்டுகள், மானபங்கப்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்துதல் பிரிவில், 30 ஆண்டுகள் சிறை தண்டனை, 12 லட்சத்து, 32 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை பாதிக்கப்பட்ட மாணவியருக்கு வழங்க வேண்டும். சிறை தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024