குடும்ப தலைவராக, 'தேசியக் கொடி' : தொடரும், 'ஸ்மார்ட் கார்டு' குழப்பம்
பதிவு செய்த நாள்19செப்
2017
21:27
பழநி: பழநி, ஆயக்குடியைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்ட, 'ஸ்மார்ட் கார்டில்' குடும்பத் தலைவர் படத்திற்கு பதில், தேசியக் கொடி இடம் பெற்றுள்ளது. தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில், ரேஷன் கார்டுகளுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகிறது.
இந்த கார்டுகளில், குடும்ப தலைவர் படத்திற்கு பதில், விநாயகர், சினிமா நடிகையின் படங்கள் இடம் பெற்றதால், சர்ச்சை கிளம்பியது. அந்த வரிசையில் தற்போது, தேசியக்கொடி படமும் வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே, புதுஆயக்குடி ஓபுளாபுரத்தைச் சேர்ந்தவர், தயா சுல்தான் காதர்சா ராவுத்தர், 53, இவருக்கு நேற்று முன்தினம், ஸ்மார்ட் கார்டு வந்தது.
அதில், குடும்பத் தலைவர் படம் இருக்க வேண்டிய இடத்தில், தேசியக்கொடி இடம் பெற்றிருந்தது.
தயா சுல்தான் கூறியதாவது: இது, அதிகாரிகள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் களின் அலட்சியத்தையே காட்டுகிறது. நம் தேசிய கொடியை அவமதிப்பு செய்வது போலவும் உள்ளது.
அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இ----சேவை மையத்தில், 30 ரூபாய் கட்டி, திருத்தம் செய்து கொள்ளலாம்' என்கின்றனர். என் பெயரையும், 'தயால் சுல்தான்' எனவும், மகள், 'பெனாசிர் சுரேகாபானு' என்பதை, 'பெனாசிர் பேகம்' எனவும் தவறாக பதிவு செய்துள்ளனர்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு களை பிழையில்லாமல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment