வரதட்சணையாக டாக்டர், 'சீட்' கேட்டு மனைவியை கொன்ற கணவன் கைது
திவு செய்த நாள்19செப்
2017
20:11
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், வரதட்சணையாக, மருத்துவ படிப்புக்கான, எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைக்காததால், ஆத்திரமடைந்து மனைவியை எரித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஐதராபாத் நகரில் வசித்து வந்தவர், ஹரிகா, 25; இவரது கணவர் ருஷி குமார். இருவருக்கும் இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.சமீபகாலமாக, வரதட்சணை கேட்டு, மனைவியை, ருஷி குமார் துன்புறுத்தி வந்துள்ளார்.
வரதட்சணையாக, எம்.பி.பி.எஸ்., சீட் பெற வேண்டும் என, நிர்ப்பந்தித்துள்ளார்; ஹரிகாவின் பெற்றோர், இந்த ஆண்டு, தங்கள் மகளுக்கு, தனியார் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சீட்டுக்கு பதில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில் இடம் பெற்று தந்துள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த ருஷி குமார், மனைவி ஹரிகாவின் பெற்றோருடன், தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், மர்மமான முறையில், உடல் எரிந்த நிலையில், ஹரிகாவின் சடலம் மீட்கப்பட்டது.எம்.பி.பி.எஸ்., இடம் கிடைக்காத வேதனையில் மனைவி ஹரிகா, தற்கொலை செய்ததாக, ருஷி குமார் தெரிவித்தார். ஹரிகாவை, ருஷி குமார் எரித்துக் கொன்று விட்டதாக, அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ருஷி குமாரை, போலீசார் கைது செய்தனர்.

No comments:
Post a Comment