Wednesday, September 20, 2017

மகாளய அமாவாசை தர்ப்பணம் : ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்19செப்
2017
22:08




ராமேஸ்வரம்: புரட்டாசி மகாளய அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் ஆடி, தை அமாவாசை அன்று, முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி, திதி பூஜை செய்து, பக்தர்கள் புனித நீராடுவர். 

இந்த அமாவாசையில் திதி செய்ய முடியாதவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை வரும், புரட்டாசி மகாளய அமாவாசையில், திதி செய்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நேற்று மகாளய அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் திதி செய்து, கடலில் புனித நீராடினர். பின், சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு திதியில் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் : திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், நேற்று அதிகாலை முதல், 1,000த்துக்கும் மேற்பட்டோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, காவிரியில் புனித நீராடினர். சமயபுரத்தில் உள்ள மாரியம்மனுக்கு, நேற்று, 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி, அம்மனை வழிபட்டனர்.

கன்னியாகுமரி : முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், நேற்று அதிகாலையே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் திருவேணி கடற்கரையில், வேதவிற்பன்னர்கள் மூலம் பலி கர்மம் நடத்தி, கடலில் நீராடினர்.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024