Wednesday, September 20, 2017

அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு
பதிவு செய்த நாள்19செப்
2017
20:54

சென்னை: 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: கடந்த, 2004 டிச., 1ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, அரசு பணியாளர்கள் அனைவரும், அலுவலக நேரத்தில், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, தவறாமல் அணிய வேண்டும் என, 2013ல் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அரசு பணியாளர்கள், அலுவலக நேரங்களில், அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளன. எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும், அரசாணையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். துறையின் செயலர்கள், கலெக்டர்கள், இது தொடர்பாக தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதே போல, ஆசிரியர்களும், பள்ளிகளில் அடையாள அட்டை அணிந்து பணிபுரியும்படி, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024