சிறைகளில் கைதிகளுக்கு ஞாயிறுதோறும் நடைபயிற்சி
பதிவு செய்த நாள்19செப்
2017
20:05
தமிழக சிறைகளில், ஞாயிற்றுக் கிழமைதோறும், விசாரணை கைதி களுக்கு நடைபயிற்சி வழங்க, சிறைத் துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, ஒன்பது மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், கிளை சிறைகளில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர், போதிய உடற்பயிற்சி இல்லாததால், நோயின் பிடியில் சிக்கி, இறப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. கைதிகள் நலனை பேணும் வகையில், தற்போது, கைதிகளுக்கு நடை பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஒன்பது மத்திய சிறையில் உள்ள, விசாரணை கைதிகளுக்கு பயிற்சிகள் துவங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை, 7:00 முதல், 8:00 மணி வரை நடைபயிற்சி, மெது ஓட்டம் ஆகியன வழங்கப்படுகின்றன. பயிற்சியின் போது, கைதிகளுடன், வார்டன்கள், ஜெயிலர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வர்.
சிறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் உட்பட, ஒன்பது மத்திய சிறைகளில், முதல் கட்டமாக துவங்கும் பயிற்சிகள், பின் அனைத்து சிறைகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில், விசாரணை கைதிகளுக்கு ஞாயிற்றுக் கிழமையும், தண்டனை கைதிகளுக்கு, வேறொரு நாளிலும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment