Wednesday, September 20, 2017

ஓய்வூதியர்களுக்கு மொபைல் ஆப்: மத்திய அரசு புதுமை
பதிவு செய்த நாள்19செப்
2017
22:48




புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தங்கள் ஓய்வு கால பலன்கள் குறித்து அறியும் வகையில், புதிய, 'மொபைல் ஆப்' இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோர், ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்கள் குறித்து அறிவதில், சிரமம் இருந்தது. இந்த குறைகளை போக்கும் வகையில், ஓய்வூதிய பலன்கள் குறித்து, இணையதளத்திலேயே அறியும் வசதி, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள் மற்றும் ஏற்கனவே ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் ஓய்வு கால பலன்களை, 'மொபைல் ஆப்' மூலம் அறியும் வசதி, இன்று முதல் துவங்கப்பட உள்ளது.மத்திய அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த, 'மொபைல் ஆப்' இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது; இதை, மத்திய இணையமைச்சர், ஜிதேந்திர சிங் இன்று துவக்கி வைக்கிறார்.

'ஓய்வூதியம் குறித்த தகவல்களுடன், அது குறித்த தங்கள் விண்ணப்பங்கள், கோப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும், இதில் அறியலாம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024