1965 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன் சிங் காலமானார்!
இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உயிரிழந்தார்.
1965-ம் ஆண்டு அது. இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. அக்னூர் பகுதி மீது கடுமையான தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அப்போது 44 வயதான அர்ஜன் சிங், ஒரு இளம் விமானப்படை பிரிவுக்கு தலைமை தாங்கி சென்று போரிட்டார். அவரது துணிச்சலான வீரத்தால் எதிரிகள் வீழ்ந்தனர். இந்திய விமானப்படை வெற்றிப்பாதையில் பயணித்தது. குறிப்பாக, அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அர்ஜன் சிங். விமானப்படையில் 5 நட்சத்திரம் அந்தஸ்து பெற்ற ஒரே அதிகாரி அர்ஜன்சிங்தான்.
இதனிடையே, நேற்று காலை அர்ஜன் சிங்குக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அர்ஜன் சிங் உடல் நலன் குறித்து நேரில் சென்று விசாரித்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அர்ஜன் சிங் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 98. இதையடுத்து, அர்ஜன் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment