சென்னையில் விடிய, விடிய வெளுத்துவாங்கும் மழை: இன்றும் பெய்யும் என்று அறிவிப்பு
இரா. குருபிரசாத்
தே.அசோக்குமார்
சென்னையில் கடந்த சில நாள்களாக வெயில் சற்று அதிகமாக இருந்த நிலையில், நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, அடையார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், "காரைக்காலில் இருந்து நெல்லூர் நோக்கி காற்று செல்வதால், இன்று (நேற்று) இரவு சென்னையில் மழை வராவிட்டால், வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப்பிரதேச கடலோரப்பகுதிகள்தான் மிகவும் துரதிருஷ்ட பகுதியாக இருக்கும். நான் ஏற்கெனவே கூறியதுபோல், இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) சென்னைக்கு மிகச்சிறந்த நாள்கள். நகரின் சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். மிகவும் வேகமாக காற்று வீசத் தொடங்கி, மழையும் மிக வேகமாக பெய்யக்கூடும்.
வேலூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சிறிய இடைவெளிக்கு பின், குறிப்பிடத்தகுந்த மழை பெய்துள்ளது. அதேசமயம், மேற்கு கடற்கரை பகுதிகள் அமைதியாக இருந்து வருகிறது. ஆனால், நாளை (இன்று) மற்றும் நாளை மறுநாள் (நாளை) மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகலில் நல்ல மழை இருக்கும். அதனால் நீர்வரத்தும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment