Wednesday, September 20, 2017

மனைவிக்கு எம்பிபிஎஸ் அட்மிஷன் கிடைக்காததால் கோபத்தில் கெரோசின் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன்!

By RKV  |   Published on : 19th September 2017 01:27 PM  | 
hyderabad-woman-death


ஹைதராபாத்: நாகோல் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் ஞாயிறு அன்று மர்மமான முறையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது கணவரும், கணவரது குடும்பத்தாரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இறந்து போன இளம்பெண்ணின் பெயர் ஹாரிகா. அவருக்கும், கணவர் ருஷி குமாருக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன.
சம்பவ இடத்தில் ஹாரிகாவின் சடலத்தைப் பார்த்து விட்டு, இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை, ஹாரிகா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சந்தேகத்தை எழுப்பிய எல்.பி.நகர் உதவிக் கமிஷனர் வேனுகோபால ராவ், ஹாரிகாவை அவரது கணவரே கெரோசின் ஊற்றி எரித்துக் கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக ஏமாற்றுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பினார். ஏனெனில், மகள் இறந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஹாரிகாவின் அம்மாவும், அக்காவும் அவரது சந்தேகத்தை உறுதிப் படுத்தும் வகையில் சில தகவல்களைத் தெரிவித்தனர்.
ஹாரிகாவுக்கும், ருஷி குமாருக்கும் திருமணமாகி 2 வருடங்களான நிலையில், ருஷி குமார், தன் மனைவி ஹாரிகாவை, எம் பி பி எஸ் அட்மிஷன் பெற முடியாத காரணத்திற்காக தினமும் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார். இந்த ஆண்டு ஹாரிகாவுக்கு பி டி எஸ் படிக்க இடம் கிடைத்த போதும், அதில் திருப்தி அடையாத ருஷி குமார். எம் பி பி எஸ் அட்மிஷன் தான் கிடைக்கவில்லையே, அதனால் அதற்கு ஈடாக மேலும் வரதட்சிணையாவது பெற்றுத் தருமாறு ஹாரிகாவைத் தொடர்ந்து தொந்திரவு செய்து வந்துள்ளார். அதன் உச்சகட்டமாகத் தான், மகளை, அவளது கணவரே, கெரோசின் ஊற்றி எரித்துக் கொன்று விட்டு இப்போது தற்கொலை என்று நாடகமாடுகிறார். என் ஹாரிகாவின் தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
ஞாயிறு அன்று ஹாரிகா இறந்த செய்தியை, ருஷி குமாரே தொலைபேசி வழியாக ஹாரிகாவின் தாயாருக்குத் தெரிவித்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறியதிலிருந்து தெரிய வருகிறது.
இந்நிலையில்... நடந்தது கொலை என்றாலும் கூட, ஹாரிகாவின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வெளிவந்த பிறகே; அவர் கொலை செய்யப்பட்டு கெரோசின் ஊற்றி எரிக்கப்பட்டாரா? அல்லது கெரோசின் ஊற்றி எரிக்கப்பட்டதால் தான் கொல்லப் பட்டாரா? என்ற சந்தேகம் தீரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024