Sunday, December 27, 2015

கோவில்களில் 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்'அணிய ஜன., 1 முதல் தடை

தமிழக அறநிலையத்துறை யால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும், ஜன., 1 முதல், 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, மதுரை உயர் 
நீதிமன்ற கிளை வழங்கி உள்ள தீர்ப்பை தொடர்ந்து, அறநிலையத்துறை, அனைத்து கோவில்களுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், 'கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும். 'ஆண்கள் வேட்டி, சட்டை, பைஜாமா குர்தா; பெண்கள் புடவை, ரவிக்கை, சுடிதார், ஷால், தாவணி போன்ற உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். 'ஷார்ட்ஸ், மிடி, குட்டை பாவாடை, ஜீன்ஸ், லெக்கிங்ஸ்'போன்ற ஆடை அணிந்து வருபவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. 'போலீஸ், தீயணைப்பு படையினர் போன்ற சீருடைப் பணியில் ஈடுபடுவோருக்கு இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை' என கூறப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நடைமுறை, ஜன., 1 முதல், அனைத்து இந்து கோவில்களிலும் அமலாகிறது. இதை மீறுபவர்கள் மீது, நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...