தைராய்டு (Thyroid) எனப்படும் கேடயச் சுரப்பி சார்ந்து ஏற்படும் நோய்கள், தைராய்டு நோய்கள் எனப்படுகின்றன. கனடாவிலிருந்து செயல்படும் கனடா தைராய்டு அறக்கட்டளை (Thyroid Foundation of Canada) என்ற அமைப்பின் தளமும், பிரிட்டன் தைராய்டு அமைப்பின் தளமும் தைராய்டு குறித்த பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கின்றன.
கனடா தைராய்டு அறக்கட்டளையின் இணையதளத்தில் தைராய்டு நோய் குறித்த உண்மைகள் (Thyroid Disease Facts), தைராய்டு செயல்பாடு (Thyroid Function), நோய் கண்டறிதல் (Clinical Diagnosis), தைராய்டு சுரப்புக் குறைவு (Hypothyroidism), தைராய்டு முடிச்சுகள் (Thyroid Nodules), தைராய்டு அழற்சி (Thyroiditis), அதி தைராய்டியம் (Hyperthyroidism), கண் நோய் (Eye Disease), தைராய்டு நோய், தாய்மையடைதலும் கருவளமும் (Thyroid Disease, Pregnancy & Fertility), குழந்தைப்பருவத் தைராய்டு நோய்கள் (Thyroid Disease in Childhood), தைராய்டு நோய் அறுவைசிகிச்சைகள் (Surgical Treatment of Thyroid Disease), தைராய்டு புற்றுநோய் (Thyroid Cancer) எனும் முதன்மைத் தலைப்புகளில் தைராய்டு நோய் குறித்த தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
இவை தவிர, தைராய்டு நோய் குறித்த பிற வெளியீடுகள் எனும் தலைப்பில் தைராய்டு நோயுடன் தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இணையதள முகவரி: http://www.thyroid.ca/
இதேபோலப் பிரிட்டன் தைராய்டு அமைப்பின் இணையதளத்தில் உட்சுரப்புத் தொகுதி (Endocrine System), பரிசோதனைகள் (Tests), அறிகுறிகள் (Symptoms), தைராய்டு சுரப்புக் குறைவு (Hypothyroidism), அதி தைராய்டியம் (Hyperthyroidism), தைராய்டு புற்றுநோய் (Thyroid Cancer), சிகிச்சைகள் (Treatments), உணவுக் கட்டுப்பாடும் ஊட்டச்சத்தும் (Diet and Nutrition), சிறுநீரகச் சுரப்பி பிரச்சினைகள் (Adrenal Problems), தொடர்புடைய உடல்நலக் குறைபாடுகள் (Associated Illnesses), சூழ்நிலை சார்ந்தவை (Environmental), குழந்தைகள் (Children) போன்ற முதன்மைத் தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. தைராய்டு நோய் குறித்த செய்திகள், புத்தகங்கள், பிற இணையதள இணைப்புகள் போன்ற தலைப்புகளிலும் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
இதன் இணையதள முகவரி: http://www.thyroid-disease.org.uk/
No comments:
Post a Comment