Sunday, December 27, 2015

மத்திய அரசு துறை பணியாளர்களில் 50 வயதுக்கு மேல் 9.47 லட்சம் பேர்

மத்திய அரசு துறைகளில் உள்ள, 33 லட்சம் பணியாளர்களில், 9.47 லட்சம் பேர், 50க்கு மேல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துஉள்ளது. மத்திய அரசில், 56 துறைகள், ஐந்து யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில், 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில், 33 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். மொத்தம் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 50 வயதிற்கு மேற்பட்டோர்மேலும், 20- - 30 வயதிற்குள், 7.32 லட்சம் பேர், 30- - 40 வயதிற்குள், 7.34 லட்சம் பேர், 40- - 50 வயதிற்குள், 8.60 லட்சம், 50 - -60 வயதிற்குள், 9.47 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில், 50 வயதிற்கு மேற்பட்டோரே அதிகபட்சமாக உள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறையில், 1.95 லட்சம் பணியாளர்களில், 80,933 பேர், அதன்கீழ் இயங்கும் தபால்துறையில், 1.89 லட்சம் பணியாளர்களில், 79,295 பேர், 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அதேபோல் பாதுகாப்புத்துறையில், 3.98 பணியாளர்களில், 1.51 லட்சம் பேர், ரயில்வேயில், 13.15 லட்சம் பணியாளர்களில் 4.93 லட்சம் பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இதேபோல் பெரும்பாலான துறைகளில், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.
இளைஞர்கள்போலீஸ் துறையில் மட்டும், 9.80 லட்சம் பணியாளர்களில், 3.94 லட்சம் பேர், 30 வயதிற்குட்பட்டோர், 2.59 லட்சம் பேர், 40 வயதிற்குட்பட்டோர் உள்ளனர். இது அதிக இளைஞர்களை கொண்ட துறையாக உள்ளது. இந்த விவரம் 7வது ஊதியக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோர், ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவர். ஏற்கனவே, 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரிக்கரிப்பதோடு, தொய்வும் ஏற்படும். விரைவில் காலியிடங்களை
நிரப்ப வேண்டும் என, மத்திய அரசு ஊழியர்கள் கேட்டு கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024