சென்னை,
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து சென்னையை புரட்டிப் போட்டுவிட்டது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.
இந்தநிலையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுப்போ அல்லது வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான மாற்று ஏற்பாட்டையோ அந்த நிறுவனங்கள் அனுமதிக்கலாம் என்று அரசு பொது விடுமுறைக்கான அறிவுரையை நேற்று முன் தினம் வழங்கியிருந்தது.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘90 சதவீத ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்று தெரிகிறது. அந்தத் துறையின் உயர் அதிகாரியிடம் விடுப்பு கேட்டு சென்றுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு பொது விடுப்பு அளிக்கப்படவில்லை என்றாலும், தேவைப்பட்டவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது’’ என்றும் தெரிவித்தார்.
ஊழியர்கள் பலர் வரவில்லை என்பதால் தலைமைச்செயலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
No comments:
Post a Comment