சென்னை :மழை பாதிப்பு காரணமாக, 'ஆதார்' எண் பணிக்கான அவகாசம், 2016 மார்ச் வரை நீட்டிக்கப்படும் என தெரிகிறது.இதுகுறித்து, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஆதார் எண் உருவாக்க, 31ம் தேதி இறுதி நாள். மொத்தம், 6.23 கோடி பேரில், 5.63 கோடி பேருக்கு, விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது.டிசம்பர் வரை, 86.42 சதவீதம் ரேகைகள் சேகரிக்கப்பட்டு, 78.13 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கன மழையால், தொடர்ந்து ஆதார் மையங்கள் செயல்பட முடியவில்லை. போதிய கணக்கெடுப்பு ஆட்களும் இல்லை. இதனால், மத்திய அரசு நிர்ணயித்த, டிச., 31க்குள், ஆதார் எண் உருவாக்கும் பணியை, முடிக்க முடியவில்லை. கணக்கெடுப்பு பணியில் உள்ள, 'பெல்' நிறுவனம், போதிய பணியாளர்களை வழங்கி உள்ளது. எனவே, ஆதார் பணி தீவிரம் பெற்றுள்ளது. இந்நிலையில், இறுதி தேதி, 2016 மார்ச் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment