First Published : 01 December 2015 02:41 AM IST
புதுதில்லியில் இருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் புதன்கிழமை (டிசம்பர் 2) தொடங்கவுள்ளது.
புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். ஏஐ173 எனும் விமானம் புது தில்லி விமான நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு கலிஃபோர்னியா நேரப்படி காலை 6 மணிக்குச் சென்றடையும். 16 மணி நேரம் 45 நிமிஷங்கள் பயண நேரமாகும்.
சென்னையில் உள்ள பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஏஐ 043 என்ற விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு புதுதில்லி விமான நிலையத்தைச் சென்றடையும்.
புதிய சேவை தொடங்கப்பட்டதை முன்னிட்டு, இந்த விமானத்தில் பயணம் செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment