அன்றைக்கும்... இன்றைக்கும்... என்றைக்குமான புத்தாண்டு பொன்மொழிகள் 10.
நம் எதிரே புதிதாக ஓர் ஆண்டு! ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதியன்று, புத்தாண்டுக் கொண்டாட்டம், பெரும்பாலானோர் எடுக்கும் தீர்மானங்கள், தலைவர்கள்-பிரபலங்கள் அருளும் வாழ்த்துச் செய்திகளைப்போல பொன்மொழிகளுக்கும் பிரத்தியேகமான ஓர் இடம் உண்டு. கடைப்பிடிக்க முடிகிறதோ, இல்லையோ... பல பொன்மொழிகள் நம்மைச் சிந்திக்கவைப்பவை. உலக அளவில் சில பிரபலங்கள் புத்தாண்டை ஒட்டி, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்ன பொன்மொழிகள் இங்கே...
``இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’
- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)
***
``ஒரு புத்தகத்தின் அத்தியாயம் எழுதக் காத்திருப்பதைப்போல், புது வருடம் நம் முன்னால் நின்றுகொண்டிருக்கிறது. இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலமாக, அந்தக் கதையை எழுத நாம் உதவுவோம்.’’
- மெலடி பீட்டி (அமெரிக்க எழுத்தாளர்)
***
``என் புத்தாண்டு தீர்மானங்களை நீங்கள் கேட்டால், அது நான் யார் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பதற்காகத்தான் இருக்கும்.’’
- சிரில் குஸேக் (ஐரிஷ் நடிகர்).
***
``புத்தாண்டு தினம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறந்தநாள்.’’
- சார்லஸ் லேம்ப் ( இங்கிலாந்து எழுத்தாளர்)
***
``புத்தாண்டை வரவேற்போம்; அதை உரிமையோடு பெறுவதற்கு நமக்கு மற்றொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.’’
- ஓபரா வின்ஃப்ரே (அமெரிக்க நடிகை)
***
``தேதி கேலண்டரின் தாளைக் கிழிக்கும் ஒவ்வொரு முறையும், புதிய யோசனை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு புதிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்!’’
- சார்லஸ் எஃப். கேட்டரிங் (அமெரிக்க தொழிலதிபர்)
***
``உங்கள் குற்றங்களுடன் போரிடுங்கள்; அக்கம்பக்கத்தாருடன் அமைதியைப்
பேணுங்கள்; பிறக்கும் ஒவ்வோர் ஆண்டும் உங்களைச் சிறந்த மனிதனாக அடையாளம்
காணச் செய்யுங்கள்!’’
- பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் (நவீன அமெரிக்காவை வடிவமைத்தவர்களில் ஒருவர், விஞ்ஞானி).
***
``அன்றன்றைய நாளுக்கான தீர்மானங்களைத்தான் நான் யோசிக்கிறேனே தவிர, ஆண்டுகளுக்காக அல்ல.’’
- ஹென்றி ஸ்பென்சர் மூர் (இங்கிலாந்து சிற்பி மற்றும் ஓவியர்).
***
``நாம் எல்லோருமே ஒவ்வொரு வருடமும் வேறொரு ஆளாக இருக்கிறோம். நம் வாழ்க்கை முழுக்க ஒரே மாதிரியான ஆளாக நாம் இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.’’
- ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (இயக்குநர்).
***
``வருகிற ஆண்டிலும் நீங்கள் தவறுகள் செய்வீர்கள் என்கிற நம்பிக்கை
எனக்கு இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் தவறுகள் செய்த பிறகுதான் புதிய
விஷயங்களைச் செய்கிறீர்கள்; புதியவற்றை முயற்சிக்கிறீர்கள்;
கற்றுக்கொள்கிறீர்கள்; அதற்காக வாழ்கிறீர்கள்; உங்களை முன்னுக்குக்கொண்டு
வருகிறீர்கள்; உங்களை நீங்களே மாற்றிக்கொள்கிறீர்கள்; உங்கள் உலகத்தையும்
மாற்றுகிறீர்கள். இதற்கு முன்னர் செய்யாதவற்றையெல்லாம் செய்கிறீர்கள். மிக
முக்கியமாக, நீங்கள் ஏதோ செய்துகொண்டு இருக்கிறீர்கள்.’’
- நெயில் கெய்மேன் (இங்கிலாந்து எழுத்தாளர்).
***
தொகுப்பு: பாலு சத்யா
நம் எதிரே புதிதாக ஓர் ஆண்டு! ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதியன்று, புத்தாண்டுக் கொண்டாட்டம், பெரும்பாலானோர் எடுக்கும் தீர்மானங்கள், தலைவர்கள்-பிரபலங்கள் அருளும் வாழ்த்துச் செய்திகளைப்போல பொன்மொழிகளுக்கும் பிரத்தியேகமான ஓர் இடம் உண்டு. கடைப்பிடிக்க முடிகிறதோ, இல்லையோ... பல பொன்மொழிகள் நம்மைச் சிந்திக்கவைப்பவை. உலக அளவில் சில பிரபலங்கள் புத்தாண்டை ஒட்டி, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்ன பொன்மொழிகள் இங்கே...
- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)
***
``ஒரு புத்தகத்தின் அத்தியாயம் எழுதக் காத்திருப்பதைப்போல், புது வருடம் நம் முன்னால் நின்றுகொண்டிருக்கிறது. இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலமாக, அந்தக் கதையை எழுத நாம் உதவுவோம்.’’
- மெலடி பீட்டி (அமெரிக்க எழுத்தாளர்)
***
``என் புத்தாண்டு தீர்மானங்களை நீங்கள் கேட்டால், அது நான் யார் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பதற்காகத்தான் இருக்கும்.’’
- சிரில் குஸேக் (ஐரிஷ் நடிகர்).
***
- சார்லஸ் லேம்ப் ( இங்கிலாந்து எழுத்தாளர்)
***
``புத்தாண்டை வரவேற்போம்; அதை உரிமையோடு பெறுவதற்கு நமக்கு மற்றொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.’’
- ஓபரா வின்ஃப்ரே (அமெரிக்க நடிகை)
***
``தேதி கேலண்டரின் தாளைக் கிழிக்கும் ஒவ்வொரு முறையும், புதிய யோசனை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு புதிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்!’’
- சார்லஸ் எஃப். கேட்டரிங் (அமெரிக்க தொழிலதிபர்)
***
- பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் (நவீன அமெரிக்காவை வடிவமைத்தவர்களில் ஒருவர், விஞ்ஞானி).
***
``அன்றன்றைய நாளுக்கான தீர்மானங்களைத்தான் நான் யோசிக்கிறேனே தவிர, ஆண்டுகளுக்காக அல்ல.’’
- ஹென்றி ஸ்பென்சர் மூர் (இங்கிலாந்து சிற்பி மற்றும் ஓவியர்).
***
``நாம் எல்லோருமே ஒவ்வொரு வருடமும் வேறொரு ஆளாக இருக்கிறோம். நம் வாழ்க்கை முழுக்க ஒரே மாதிரியான ஆளாக நாம் இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.’’
- ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (இயக்குநர்).
***
- நெயில் கெய்மேன் (இங்கிலாந்து எழுத்தாளர்).
***
தொகுப்பு: பாலு சத்யா
No comments:
Post a Comment