Friday, January 13, 2017

 குறைந்தபட்சம் ரூ.1.84 லட்சம்; அதிகபட்சம் ரூ.7.59 லட்சம் சம்பளம்! தமிழக அரசு தகவல்
 
சவூதி அரேபிய அமைச்சகத்தின் ரியாத் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு சிறப்பு மருத்துவர்களுக்கு வளருகின்ற நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு அனுபவத்திற்கேற்ப ரூ.1.84 லட்சம் முதல் ரூ.3.03 லட்சமும், முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப ரூ.5.01 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7.59 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவூதி அரேபிய அமைச்சகத்தின் ரியாத் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அவசர மருத்துவம் (Emergency Medicine),, ஆர்தோபீடிக் (Orthopedics),, மகளிர் மகப்பேறு மருத்துவம் (Obs & Gyn),, தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), மயக்க மருத்துவம் (Anaesthesia), இன்டர்னல் மெடிசன் ((Internal Medicine), குழந்தை மருத்துவம் (Pediatrics) ரேடியாலஜி(Radiology), நரம்பு அறுவைச் சிகிச்சை (Neuro Surgery) போன்ற பிரிவுகளில் அலோபதி மருத்துவர்களுக்கான நேர்முகத் தேர்வு டெல்லியில் 18.1.2017 முதல் 20.1.2017 வரையிலும் மற்றும் பெங்களூருவில் 22.1.2017 மற்றும் 23.1.2017 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.


இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதுக்குட்பட்ட கண்சல்டண்டுகள் (Consultants) மற்றும் சிறப்பு மருத்துவர்கள் (Specialists), விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு மருத்துவர்களுக்கு வளருகின்ற நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு அனுபவத்திற்கேற்ப ரூ.1.84 லட்சம் முதல் ரூ.3.03 லட்சமும், முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு பணி அனுபவத்துக்கேற்ப ரூ.3.07 லட்சம் முதல் ரூ.5.09 லட்சமும், கண்சல்ட்ண்ட் மருத்துவர்களாக இருப்பின் வளரும் நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு பணி அனுபவத்துக்கேற்ப ரூ.2.42 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.3.98 லட்சமும், முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு பணி அனுபவத்துக்கேற்ப ரூ.5.01 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7.59 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.
மேலும் சிறப்பு தகுதிக்கான சலுகையாக 20 முதல் 50 விழுக்காடு ஊதியத்துடன், இலவச உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவூதி அரேபிய அரசின் சட்டத்திட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ள மருத்துவர்கள் தங்களின் முழுவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்திலோ அல்லது 044-22505886/22502267/22500417 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம்.

இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண்.RC No.B-0821/CHENNAI/CORPN/ 1000+/5/308/84 ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024