பாதுகாப்பு வாபஸ்.. பதவியேற்பு விழா நடக்குமா?
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சசிகலாவின் பதவியேற்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறவிருந்தது.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த அதிரடியான செய்தியாளர்கள் சந்திப்பில், சசிகலா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து சசிகலா முதல்வராகப் பதவியேற்பதில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது, பதவியேற்பு பற்றி ஆளுநரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லாததால் அங்கு பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த காவல்துறையினர் அனைவரும் திரும்ப பெறப்பட்டனர்.
No comments:
Post a Comment