Friday, February 10, 2017

தனிமை விரும்பியா நீங்கள்? #FridayFeeling


தனிமைவாதிகள்! அவர்களை நீங்கள் பார்த்ததுண்டா? ரொம்பவே வித்தியாசமாய் இருப்பார்கள் அவர்கள். ரொம்ப சென்சிட்டிவாக இருப்பார்கள். வெளியில் இருந்து நாம் பார்க்கும்போது, ஏன் இவன்/இவள் இத்தனை தனிமையில் இருக்கிறார் எனத்தோன்றும். யார் இவர்கள்? இவர்களது மனநிலை எப்படி இருக்கும்? என்ன வாழ்க்கை முறை இவர்களுடையது? கொஞ்சம் அலசி ஆரோய்ந்தோம். அதன் பதில்கள் ஆச்சர்யம் தரும்படி இருக்கிறது… அப்படி என்னதான் அவர்கள் வாழ்வியல் முறையில் உள்ளதென்று நீங்களும் பாருங்களேன்!

"தனிமை எதிர்மறை வாழ்க்கையை ஏற்படுத்திவிடுமோ?!"

தனிமையில் இருக்கும் ஒருவர், நிறைய யோசிப்பார். அந்த யோசனைகள் யாவும், தனிமை என்ற உணர்வைத் தாண்டி, பல விதமான கோணங்களில் இருக்கும். பொதுவாகவே, தனிமையானது மனதிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து எண்ணங்களையும் வெளியில் கொண்டுவரும் வல்லமை கொண்டது. பெரும்பாலான நேரங்களில் தனிமையின் போது மனதில் கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற உணர்வுகள் மிகுதியாய் இருக்கப்பெறுவர்…. அதுசரி, அதைதானே நாம் அதிகமாய் வெளிகாட்டாமல் இருப்போம்! எனில், தனிமை ஒருவரை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடும் அபாயம் நிறையவே இருக்கிறது. தனிமை அவர்களின் கோபத்தை தூண்டி, வருத்தத்தை அதிகரித்து எதிர்மறை எண்ணங்களை தந்துவிடும் வல்லமை உடையதுதான் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.

இந்தத் தனிமை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்ட கார்டெக்ஸ் இதழின் முடிவு, மேலே கேட்ட கேள்விக்கு ஒரு சபாஷ் பதிலை தந்துள்ளது. என்ன பதில் தெரியுமா அது? நண்பர் படைசூழ இருக்கும் ஒருவருக்கு, ஒரு பொது இடத்தில் ஏதோவொரு அநாகரீகமோ, அநீதியோ இழைக்கப்பட்டால், அதிலிருந்து தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளும் சமயோகித அறிவு பெரிதளவில் இருக்காதாம். இந்த ஆராய்ச்சியானது, நியூயார்க்கில் யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸில் மனநலம் மற்றும் மூளை-தொடர்பியல் ஆய்வாளர்களால் நடத்தப்பட்டுள்ளது. அவர்களது ஆராய்ச்சியினை ஒரு தம்பதியையும், தனி நபர் ஒருவரையும் வைத்து மேற்கொண்டுள்ளனர். தனிமை என்பது ஒருவரது பொது வாழ்வில் எப்படிபட்ட மாற்றங்களை தருகிறது என்பதுதான் இதில் மிகமுக்கியமாக கருதப்படுகிறது.

"தைரியமூட்டும் தனிமை"



கை-வின்ச் என்ற நியூயார்க்கை சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர், ‘எமோஷனல் ஃபர்ஸ்ட் எய்ட்’ என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் தனிமை விரும்பிகள் பற்றி கூறும்போது, “நண்பர் படைசூழ இருப்பவர்களின் மூளையானது பொதுவாகவே எப்போதும் அதீத-பாதுகாப்பாக உணரும். அதனால் கூட்டத்தில் இருந்து விடப்படும் போது, ஒரு பிரச்சனையை தனியே நின்று எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் திணறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. ஆனால், தனிமையை அதிகமாய் உணர்ந்தவர் ஒருவர், எப்போதும் தன்னை மற்றவர்களிடம் இருந்து விலக்கி கொள்வார். இதன் பாதிப்பாக, அவர்கள் எப்பொழுதும் பிரச்சனைகளை சந்திக்கும் மனநிலையில் தான் இருப்பர். அந்த மனநிலை, பிரச்சனை வந்தால் பார்த்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையை தந்து அவர்களுக்கு தைரியமூட்டும்” என்கிறார்.

38 தனிமை படுத்தவர்களும், 32 தனிமைக்கு அப்பாற்பட்டவர்களும் கலந்து கொண்டு நடத்தப்பட்டுள்ளது இந்த ஆய்வு. தனிமைப்பட்டவர்கள் என்பது, நண்பர்கள், உறவினர்கள் என பலர் இருந்த நேரத்திலும் கூட எனக்கு யாரும் வேண்டாம் எனக்கூறுபவர்கள் என்ற அடிப்படையிலேயே கூறப்படுகிறது.

"ஆய்வு முறையும், ஆச்சர்ய முடிவும்"

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களின் தலைகளில் இ.இ.ஜி. பொருத்தப்பட்டு, சில தேர்வுகள் நடத்தப்பட்டது! உதாரணமாக, ஸ்ட்ரூப் டெஸ்ட் முதலியவையும் செய்யப்படும். (ஸ்ட்ரூப் டெஸ்ட் என்பது, வார்த்தைகளின் மீது இருக்கும் வண்ணங்களை கண்டறிவது.) ஆராய்ச்சிக்கு உட்பட்டவர்கள் தங்களது செய்யும் வேலையில் எந்த அளவிற்கு கவனத்தோடு இருக்கின்றனர் என்பதை கண்டறிவதற்காகவே இது போன்ற டெஸ்ட் வைக்கப்படுகிறது. ஆண்டி-சோஷியல் வார்த்தைகள், சோஷியல் வார்த்தைகள் முதலியவற்றை கூறி, அவற்றின் போது மூளையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது போன்றவை முடிவுசெய்யப்படும்.

ஆராய்ச்சிகளின் முடிவில், மற்றவர்களை காட்டிலும் தனிமை விரும்பிகள், சஞ்சலங்கள் ஏதுமில்லாதவராய் இருப்பதாக கூறுகின்றனர். எனிலும் அவர்கள் இதுகுறித்து எதுவும் அறியாது, இயல்பாகவே இவ்வாறு இருக்கின்றனர். தனிமையில் இருப்பவர்கள் அதிகம் சிரிக்கமாடார்கள் என்ற கருத்து பரவலாய் இருந்தாலும், தனிமையில் ஒருவர் எடுக்கும் முடிவு தான் அவரது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதும் மறுப்பதற்கு இல்லை. தனிமையில் இருப்பவர்கள் சோகமாக இருக்க வேண்டியதில்லை. அதுவும் ஒரு வாழ்விய்ல முறைதான் என்கிறார்கள் அறிஞர்கள்!

- ஜெ.நிவேதா, (மாணவப் பத்திரிகையாளர்)

No comments:

Post a Comment

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar  TIMES NEWS NETWORK 12.01.2025 Bhopal : Two more crocodiles were rescued on Satu...