சட்டப்பேரவையில் தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது என, சபாநாயகர் தனபால் வேதனை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
சபாநாயகரின் இருக்கை, மேஜை, மைக் உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இன்றைய அலுவல் நிரல் அடங்கிய காகிதங்களை திமுகவினர் கிழித்தெறிந்தனர். இதன் காரணமாக அவை பகல் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியதும் பேசிய சபாநாயகர் தனபால், தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டுத்தானே நான் அவையை நடத்த முடியும் என்றும் தனபால் கூறினார்.

No comments:
Post a Comment