கொடுத்த உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
By DIN | Published on : 15th February 2017 10:48 AM |
புது தில்லி: நீதிமன்றத்தில் ஆஜராக கால அவகாசம் கேட்ட சசிகலா தரப்பு வழக்குரைஞரிடம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமான உத்தரவுகளை கூறினர்.
இன்று உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் முன்பு ஆஜரான சசிகலா வழக்குரைஞர், வாய் மொழியாகவே சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் கோரினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், சசிகலாவுக்கு எந்த அவகாசமும் கொடுக்க முடியாது. அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.
தீர்ப்பின் போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment