பலப்பரீட்சையில் சசி தோற்றால் அடுத்தது என்ன?
சட்டசபையை முடக்க கவர்னர் உத்தரவிட வாய்ப்பு
DINAMALAR
தமிழகத்தில், 1988க்குப் பின், தற்போது, ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, சசி தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ தவறினால், கவர்னர் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.
சட்டசபையில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 234. ஒருவர் நியமன உறுப்பினர்; அவருக்கு ஓட்டுரிமை இல்லை. ஆட்சி அமைக்க, மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யில், பாதிக்கும் மேல் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவை. அதாவது, 118 எம்.எல்.ஏ.,க் களின் ஆதரவு வேண்டும்.
சசிகலா, தனக்கு, 120க்கும் மேற்பட்ட எம்.எல். ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், ஒவ்வொருவராக அங்கிருந்து சென்று கொண்டிருப்பதால், அதே பலத்தை, அவர் தொடர்ந்து தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பி னும், தனக்கு, 120க்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க் களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, ஆட்சி அமைக்க அழைக்கும் படி, கவர்னரை சந்தித்து, சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல, பன்னீர்செல்வமும், தன்னை சசிகலா தரப்பு மிரட்டி ராஜினாமா வாங்கி விட்ட தாகத் தெரிவித்து, தனக்கு வாய்ப்பு அளித்தால்,
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என, உறுதி அளித்துள்ளார். அதனால், இருவரில் ஒருவரை ஆட்சி அமைக்க அழைக் கும் பட்சத்தில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் கோரு வார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, சட்ட சபையில் ஓட்டெடுப்பு நடக்கும் போது, பெரும் பான்மை கிடைக்காவிட்டால், கவர்னரின் அடுத்த கட்ட நடவடிக்கை, என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற சட்டசபை அதிகாரி கள் சிலர் கூறியதாவது: தற்போது, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 117 ஓட்டுகள் இருந்தால் போதும். முதல்வராக பதவி யேற்பவர், பெரும்பான்மையை நிரூபிக்க, அதிக பட்சம், ஒரு வாரம் வரை கவர்னர் அவகாசம் தருவார்.
அவர் குறிப்பிடும் நாளில், அ.தி.மு.க.,வின் சசிகலா தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ, பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், ஆறு மாதத்திற்கு, சட்டசபையை முடக்கி வைக்க, கவர்னர் உத்தரவிடும் வாய்ப்பு உள்ளது. உடனே, அடுத்த பெரிய கட்சியான, தி.மு.க.,வை ஆட்சி அமைக்க, அவர் அழைக்க மாட்டார்.
ஆறு மாத காலம், தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமையும். ஆறு மாதத்திற்குள், சசிகலா தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ, 'எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. அதை, சட்டசபையில் நிரூபிக்க தயார்' என, கூறலாம். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் மீண்டும் வாய்ப்பு தருவார்.
ஒருவேளை, தி.மு.க., தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என, கூறினால், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். தி.மு.க.,வும், பலத்தை நிரூபிக்காத
பட்சத்தில், மத்திய அரசுக்கு, அதை கவர்னர் தெரிவிப்பார். பின், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, மீண்டும் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரகசிய ஓட்டெடுப்பு நடக்குமா?
சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் நாளில், குறிப்பிட்ட நேரத்திற்கு, சபையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். அதற்கு மேல், உறுப்பினர்கள் வந்தால் அனுமதி இல்லை. சில முக்கிய அதிகாரிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர். பார்லிமென்டில், பொத் தானை அழுத்தி, ஓட்டு போடும் வசதி உள்ளது. அதுபோன்ற வசதி இங்கு இல்லை. அதனால், சபாநாயகர், குரல் ஓட்டெடுப்பு தான் கோருவார்.
அது தெளிவாக இல்லாத பட்சத்தில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதாவது, யாரை ஆதரிக்கிறோம் என்பதை, சீட்டில் எழுதி, கொடுக்கும்படி கூறுவர். இதில், இரு தரப்புக்கும் சம ஓட்டுகள் கிடைத்தால், சபாநாயகரும் ஓட்டு போடலாம். தற்போதைய, அரசியல் சூழ்நிலை யில், சசி கும்பலின் மிரட்டலால், எம்.எல்.ஏ.,க்கள் பலர் பன்னீருக்கு வெளிப்படை யாக ஆதரவு தெரிவிக்க தயங்கும் நிலை உள்ளது.
அதனால், சட்டபையில், குரல் ஓட்டெடுப்பு நடத்தினால், அது அவருக்கு பாதகமாக அமையலாம். எனவே, ரகசிய ஓட்டெடுப்பை நடத்த வேண்டும். அப்போது தான், எம்.எல்.ஏ.,க்களின் உண்மையான ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியவரும். இதை நம்பிக்கை ஓட்டு கோர உத்தரவிடும் போது, கவர்னரும் உறுதி செய்ய வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கை.
- நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment