Friday, February 10, 2017

ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க மறுப்பு
அறிக்கை அனுப்பினார் கவர்னர்

DINAMALAR
'பெரும்பான்மையை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என, முதல்வர் பன்னீர்செல்வமும்; ஆட்சி அமைக்க, அழைப்பு விடும்படி சசிகலா வும், தமிழக கவர்னரை சந்தித்து, மனு கொடுத்தனர்.




இரு தரப்பு கோரிக்கையையும் கேட்ட கவர்னர், மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். அவர் எந்த பதிலும் தெரிவிக்காததால், தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.இம்மாதம், 5ம் தேதி நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மறுநாள், கவர்னர், தமிழகம் வருவார்; அவரை சந்தித்து, கடிதத்தை கொடுத்து, முதல்வராக பொறுப்பேற்கலாம் என, சசிகலா எண்ணினார்.

ஆனால், கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழகம் வருவதை தாமதப்படுத்தினார். பிப்., 7ல், சசிகலாவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார். தன்னை கட்டாயப் படுத்தி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக புகார் தெரிவித்தார். மக்கள் விரும்பினால், ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவேன் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று மாலை, கவர்னர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்தார். அவரை . சந்திக்க, முதல்வர் பன்னீர்செல்வம், மாலை, 4:40 மணிக்கு சென்றார். அவரை சந்தித்துவிட்டு, மாலை, 5:15 மணிக்கு, வெளியில் வந்தார்அவருடன், அ.தி. மு.க., அவைத் தலைவர் மது சூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வ நாதன், எம்.பி., மைத்ரேயன் உடன் சென்றனர். 'என்னை கட்டாயப்படுத்தி, ராஜினாமா கடிதம் கொடுக்கவைத்தனர்.

எனக்கு, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், சசிகலா தரப்பினர் கடத்தி சிறை வைத்துள்ளனர். என் ராஜினாமா கடிதத்தை, திரும்ப பெற்றுக் கொள்கிறேன். மெஜாரிட்டியை நிரூபிக்க, எனக்கு வாய்ப்பு அளியுங்கள்' என, கவர்னரிடம், பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். முதல்வரும், கவர்னரும், ஐந்து நிமிடங்கள் தனியாக பேசினர். அதன்பின், முதல்வர் பன்னீர்செல்வம், மகிழ்ச்சியாக வெளியே வந்தார்.

இரவு, 7:20 மணிக்கு, கவர்னரை சந்திக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா வந்தார். அவருடன், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, முன்னாள் எம்.பி., தினகரன் ஆகியோர் சென்றனர்.கவர்னரிடம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து, ஆட்சி அமைக்க, சசிகலா உரிமை கோரினார்.

அப்போது கவர்னர், 'சொத்து குவிப்பு வழக்கில், உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், என்ன செய்வீர்கள்?' எனக் கேட்டதாக தெரிகிறது. அதற்கு, பதில் கூறாமல், தனக்கு எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு அளித்துள்ள விபரத்தை மட்டும், சசிகலா விளக்கி உள்ளதாக கூறப்படுகிறது. சந்திப்பு முடிந்து, இரவு, 8:00 மணிக்கு, அவர் வெளியே வந்தார். இருவர் கூறிய கருத்துக்க ளையும் கேட்ட கவர்னர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து, ஜனாதி பதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர்ருக்கு, அறிக்கை அனுப்பி உள்ளார்.
கவர்னர், சட்ட நிபுணர்களுடன், ஆலோசித்த பிறகே, அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிடு வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, முதல்வராக பன்னீர் செல்வம் நீடிப்பாரா; அல்லது சசிகலா பதவியேற்க அனுமதிப்பாரா என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது.

ஜெ., பாணியில் பன்னீர்!

ஜெயலலிதா, கவர்னரை சந்திக்கவோ, விமான நிலையத்திற்கோ செல்லும்போது, கோட்டூர் புரத்தில் உள்ள, விநாயகர் கோவிலில் வழி பட்டு செல்வது வழக்கம். அதேபோல், நேற்று கவர்னரை சந்திக்க சென்ற, முதல்வர் பன்னீர் செல்வம், கோட்டூர்புரம் விநாயகரை வணங்கிவிட்டு சென்றார்.
சசிகலா, கவர்னர் மாளிகைக்கு செல்வதற்கு முன், மாலை, 6:55 மணிக்கு, ஜெ., நினைவிடம் சென்றார். தனக்கு ஆதரவு அளிக்கும், எம்.எல்.ஏ.,க்கள் பட்டியல் மற்றும் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்த கடிதம் ஆகியவற்றை, நினைவிடத்தில் வைத்து வணங்கினார். 

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar  TIMES NEWS NETWORK 12.01.2025 Bhopal : Two more crocodiles were rescued on Satu...