Thursday, February 16, 2017

அதிரடி தீர்ப்பால் ஆடிப்போன அமைச்சர்கள்!:
அடுத்து உருளப்போவது யார் தலை?

DINAMALAR
கோவை:வருமானத்துக்கு அதிகமாக, முறை கேடான வழிகளில் சொத்து குவித்திருக்கும் தமிழக அமைச்சர்கள் பலரும், ஊழலுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் ஆடிப்போய்உள்ளனர்.




சட்டத்தின் பிடியில் சிக்கி, அம்மாவும், சின்னம்மாவுமே அல்லோலப்பட்டு விட்ட நிலையில், தங்களின் கதி என்னவாகுமோ என்ற அச்சம், இப்போதே அவர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது.

தமிழகத்தில், 1991 - 96ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.

இவர்களுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதத்தை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, ஊழல் அரசியல்வாதிகள் மீது விழுந்த, மரண அடியாக கருதப்படுகிறது.

ரகசிய அறிக்கைகள்

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அமைச்சர்களின் திரைமறைவு நடவடிக்கை களை, உளவுத்துறை மூலமாக கண்காணித்து, அவ்வப்போது ரகசிய அறிக்கை பெற்று, அதன்படி, நடவடிக்கை மேற்கொண்டு வந்தார். அடிக்கடி அமைச்சர்கள் மாற்றமும், பதவி பறிப்பும் நடந்தது.

கடந்த, 2014ல், சொத்து குவிப்பு வழக்கில், சிறை சென்ற ஜெ., அதிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பின், அரசு நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளில், அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது; உடல்நலம் குன்றியதே இதற்கு காரணம்.

அமைச்சர்கள் மீதான கண்காணிப்பும், ரகசிய அறிக்கை பெறுவதும் தடைபட்டது. இச்சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய மன்னார் குடி கும்பல், அரசுத் துறை ஒப்பந்தங்களில் புகுந்து விளையாட ஆரம்பித்தது.

முட்டை, பருப்பு உள்ளிட்ட, அத்தியாவசிய பொருட்கள் கொள்முத லில் ஊழல் தலைதுாக்கியது.

ஊழல் அதிகாரிகள்

இதுதவிர, பள்ளிகளுக்கு தளவாடப் பொருட்கள் வாங்கியதில் ஊழல்; பொதுப்பணித் துறையில், 'டெண்டர்' ஊழல்; மணல் கொள்முதல் ஊழல்; மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை துார்வாரு வதாக கூறி மண் கடத்தல் என, அனைத்துத் துறை களையும் ஆக்கிரமித்தது ஊழல்.
இதன் உச்சக் கட்டமாக, பொதுப்பணித் துறை ஒப்பந்த தாரர்கள், ஊழல் அதிகாரிகளின் பெயர்களை அம்பலப்படுத்தி, சென்னையில் பொது இடங்களில், 'பேனர்' வைத்து போராட்டம் நடத்தினர். ஆடிப்போன அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்து, பிரச்னை மேலும் வெடிக்காமல் தடுத்தனர்.

தாமதமாக விசாரணை நடத்திய ஜெயலலிதா, சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து எச்சரித்தார். எனினும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அமைச்சர்கள் கதிகலக்கம்

தமிழக அமைச்சர்களில் சிலர், முறைகேடான வழிகளில், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, வருமானத்துக்கும் அதிகமாக சேர்த்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து, வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. சமீபத்தில், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீடுகளில் நடந்த சோதனையை தொடர்ந்து, சில அமைச்சர்கள் கிலி அடைந்தனர்.

தங்கள் மீதும் வருமானவரித் துறையின் பார்வை விழுந்திருக்குமோ என அஞ்சினர். ஆனால், அமைச்சர்களின் அந்தரங்க தொடர்புகள் மற்றும் சொத்து குவிப்பு விபரங்களை திரட்டிய வருமான வரித் துறை, அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக அதுகுறித்த கோப்புகளை டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளது.

விரைவில், தமிழக அமைச்சர்கள் சிலரது வீடுகளில், சோதனைகள் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், சர்வ வல்லமை உடையவராக, கட்சியினரால் கருதப் பட்ட சசிகலாவே, சட்டத்தின் பிடியில் சிக்கி, சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், வருங்காலத் தில் தங்களுக்கும் அதுபோன்ற நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், இப்போதே அமைச்சர்களை ஆட்டிப்படைத்து வருகிறது.

வருமானத்தை மீறிய சொத்து மதிப்பிடப்படுவது எப்படி?

மாநில ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின்உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு அதிகாரி அல்லது அரசியல் ரீதியாக பதவி வகிக்கும் ஒருவரின் மாத வருமானம், 70 ஆயிரம் ரூபாய் என, வைத்துக் கொள்வோம். இதை, 12 மாதத்துக்கு கணக்கிட் டால், 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்; இதுவே, இவரது ஆண்டு வருமானம்; அதாவது வருவாய். இவருக்கு மனைவி, கல்லுாரிகளில் படிக்கும் இரு பிள்ளைகள், வயதான தாய், தந்தை இருப்பதாக கொள்வோம்.

மாதம்தோறும் குடும்பம் நடத்துவதற்கான செலவு, பிள்ளைகளின் படிப்புக்கான செலவு, தாய், தந்தையருக்கான மருத்துவ செலவு, வீடு, வாகன கடன் அடைப்பு உள்ளிட்ட, அத்தியாவசிய செலவுகள், 50 ஆயிரம் ரூபாய் ஆவதாக கணக்கிட்டால், ஆண்டுக்கான மொத்தச் செலவு, ஆறு லட்சம் ரூபாய். இதை, மொத்த வருமானம், 8 லட்சத்து, 40 ஆயிரத்தில் இருந்து கழித்தால், 2 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் மீதமிருக்கும்; இதுவே, இவரது சேமிப்புத் தொகை.

ஆனால், அதிகப்படியாக, அதாவது, 30 லட்சம் ரூபாய் வரை இருப்பதாக வைத்துக் கொண் டால், 2 லட்சத்து, 40 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் பணம், நகை, சொத்துக்கள், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்டவை. அதாவது, அந்த நபர், தன் பதவியை பயன்படுத்தி, லஞ்சம், ஊழல் மூலமாக திரட்டப்பட்டவை. இந்த கணக்கீட்டின்படியே, சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

ஒருவேளை, அதிகாரியின் மனைவி, திருமண மாகாத மகன் அல்லது மகள், வேலைக்குச் செல்பவராகவோ அல்லது தொழில் செய்பவ ராகவோ இருப்பின், அவர்களது வருமானமும் மேற்கண்டவாறே கணக்கிடப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.










No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...