சசிக்கு அவகாசம் அளிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
இந்நிலையில், சசிகலா சார்பில், மூத்த வழக்கறிஞர், கே.டி.எஸ். துளசி, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று, ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'தன் அரசியல் விவகாரங்களை கையாள வேண்டியுள்ளதால், சரண் அடைவதற்கு, சசிகலாவுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்து, நீதிபதி பினாகி சந்திர கோஷ் தலைமையிலான, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியதாவது:இந்த மனு மீது, எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. சொத்து குவிப்பு வழக்கில், நாங்கள் அளித்துள்ள தீர்ப்பில், எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது. ஏற்கனவே, அதிக பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை அளித்துள்ளோம். அதில் ஒரு வார்த்தையை கூட மாற்ற முடியாது; இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
உடனடியாக என்பதற்கு அர்த்தம் தெரியுமா? : ''சசிகலாவுக்கு பல்வேறு பணிகள் இருப்பதால், சரணடைய அவகாசம் அளிக்க வேண்டும்,'' என, மூத்த வழக்கறிஞர் துளசி வலியுறுத்திய போது, 'தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள், உடனடியாக சரணடைய வேண்டும் என, நாங்கள் தீர்ப்பில் கூறியுள்ளோம். உடனடியாக என்பதற்கு, உங்களுக்கு அர்த்தம் தெரியுமா' என, நீதிபதிகள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment