Thursday, February 16, 2017

சசிகலாவுக்கு கைதி சீருடை வழங்கப்படுமா? : சட்ட நிபுணர் விளக்கம்

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா உட்பட மூவருக்கு, சிறைக்குள் சலுகை கிடைக்குமா என்பது குறித்து, சீனியர் வக்கீல் கருத்து தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில், அ.தி.மு.க., தற்காலிக பொது செயலர் சசிகலா, அவரது அண்ணி இளவரசி, ஜெ., வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோருக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட் அளித்த, நான்காண்டு தண்டனையை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம், நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு குறித்தும், குற்றவாளிகள் அனுபவிக்க வேண்டிய தண்டனை குறித்தும், கோவையை சேர்ந்த மூத்த வக்கீல், ஏ.பி.ஜெயச்சந்திரன் கூறியதாவது:

 உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை, குற்றவாளிகள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் ஏற்று தான் ஆக வேண்டும். தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய முடியாது. தண்டனை பெற்றவர்கள், சட்டப்படி அடுத்த தீர்வாக, தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய, அதே கோர்ட்டில், 30 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்யலாம். இதில், வக்கீல் வாதங்கள் நடைபெறாது. தீர்ப்பில், தவறு இருந்தால் திருத்தப்படலாம். பெரும்பாலும், இதுபோன்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அப்படி தள்ளுபடி செய்யப்படும் பட்சத்தில், தீர்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்கான தெளிவின்மை மனு தாக்கல் செய்யலாம். இம்மனு, உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சீனியர் வழக்கறிஞர் கையொப்பத்துடன் தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்ற மனுக்கள், 'அரிதிலும் அரிதான' வழக்கு என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் மட்டும், மறு பரிசீலனை செய்யப்படுகிறது. இல்லா விட்டால், தள்ளுபடியாகும். குற்றவியல் நடைமுறை சட்டம், 429வது பிரிவின் கீழ், குற்றவாளிகள், விசாரணை காலத்தில் சிறையில் இருந்த காலம் கழிக்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், ஜாமின் என்ற கேள்வி எழுவதில்லை. பரோலில் வர வேண்டும் என்றால், கர்நாடக அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

 சசிகலா உள்ளிட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டதும், மற்ற கைதிகளுக்கான சீருடை வழங்க மாட்டார்கள். வருமான வரி கட்டுபவர்கள் என்றால், அவர்கள் சாதாரண உடை அணியலாம்.கட்டில், மின் விசிறி, தனி கழிப்பறை வசதிகள் கொண்ட தனி அறை வழங்கப்படும். சசிகலா உள்ளிட்ட மூவரும், வருமான வரி கட்டுபவராக இருந்தால், சலுகை கிடைக்கும்.குற்றவாளிகள், நான்காண்டு முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆயுள் தண்டனை கைதிகளுக்கு போல, நன்னடத்தை விதியின் கீழ், சலுகை கிடைக்காது.கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு, சிறைக்குள் வேலை அளிக்கப்படும். சாதாரண காவல் தண்டனை அளிக்கப்பட்டிருந்தால், குற்றவாளிகள் விரும்பினால் வேலை செய்து கொள்ளலாம்; அதற்கு சம்பளம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...