ரயில்வே ஊழியர்களுக்கு 'போனஸ்' அறிவிப்பு
பதிவு செய்த நாள்20செப்
2017
22:56
புதுடில்லி: ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாள் ஊதியத்தை, போனசாக வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே ஊழியர்களுக்கு, மத்திய அரசு போனஸ் வழங்கி வருகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான போனஸ் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிஉள்ளது. 'கெசடட்' அந்தஸ்து பெறாத, ரயில்வே ஊழியர்களுக்கு, உற்பத்தி அடிப்படையில், 78 நாள் ஊதியத்தை, போனசாக வழங்க, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
'போனஸ் தொகை, தசரா விடுமுறைக்கு முன் வழங்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 12.30 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைவர். ஆர்.பி.எப்., மற்றும் ஆர்.பி.எஸ்.எப்., போலீசாருக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.
'ரயில்வே ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படுவதன் மூலம், மத்திய அரசுக்கு, 2,245 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment