வங்கி கணக்கு துவக்கம் ஏர்டெல்லுக்கு, ‘நோட்டீஸ்’
பதிவு செய்த நாள்23செப்
2017
00:28
புதுடில்லி : பார்தி ஏர்டெல் நிறுவனம், அரசு உத்தரவுப்படி, மொபைல் போன் வாடிக்கையாளர்களின், ‘ஆதார்’ விபரங்களை பெற்று வருகிறது. அவற்றின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல், அதன், ‘ஏர்டெல் பேமென்ட் பேங்க்’கில் கணக்கு துவக்கி விடுவதாக, ஆதார் ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, ஆணையம், பார்தி ஏர்டெல், ஏர்டெல் பேமென்ட்ஸ் பேங்க் ஆகியவற்றுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது.அதில், மொபைல் போன் வாடிக்கையாளரின் ஒப்புதலின்றி, ஏர்டெல் பேமென்ட் பேங்க் கணக்கு துவக்குவது, சட்டமீறல் மற்றும் அபராதம் விதிக்கக் கூடிய குற்றம் என்றும், உடனடியாக, தகுந்த நடவடிக்கை எடுத்து, அறிக்கை அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு, ‘வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் மட்டுமே, வங்கிக் கணக்கு துவக்கப்படுகிறது. சட்ட விதிகளின்படி, வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, வெளிப்படையான செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வோம்’ என, பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமென்ட் பேங்க் பதில் கடிதம் அனுப்பி உள்ளன.

No comments:
Post a Comment