2க்கு மேல் பெற்றால் வேலையில்லை :சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
கவுஹாத்தி: 'இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு, அரசு வேலை, சலுகை கிடையாது' என்ற புதிய சட்டத்திற்கு, அசாம் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அசாம் மாநிலத்தில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2001ல், மாநிலத்தில், 2.66 கோடியாக
இருந்த மக்கள் தொகை, 2011ல், 3.12 கோடியாக உயர்ந்தது. பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு அரசு பணி, சலுகைகளை பெறுவதில் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதற்கான புதிய சட்டம், மாநில சட்டசபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த, சட்டசபைகூட்டத்தில், நீண்ட விவாதத்திற்கு பின், புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளோர், அரசு பணி, சலுகைகளை பெற முடியாது.
பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற, எம்.எல்.ஏ.,க்களின் பதவியை ரத்து செய்யவும், எதிர்காலத்தில், இவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் அனுமதி கோரும் மசோதா, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment