கடைசியில் எனது 33 வருட கனவு நிறைவேறியது: குஷ்பூ!
By சரோஜினி | Published on : 20th September 2017 03:16 PM |
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமாகக் கூட குஷ்பூ சுந்தரைத் தெரியாதவர்கள் யாருமிருக்க முடியாது. அந்த அளவுக்கு குஷ்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, இந்தி, மராத்தி என அத்தனை மொழிப்படங்களிலும் நடித்திருப்பதோடு தற்போது அரசியல்ரீதியாகவும் அகில இந்திய காங்கிரஸின் பிரபலமான அடையாளங்களில் ஒருவராக இருப்பதால் குஷ்பூவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகம். அது மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் என்றால் அது குஷ்பூவுக்காகத் தான். இப்படி தன்னைச் சுற்றியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களைக் கொண்டவரான குஷ்பு யாருடைய பரம ரசிகர் தெரியுமா? அதை, தான் நடிக்க வந்தது முதல் இன்று வரை தனது பல நேர்காணல்களிலும் குஷ்பூவே பெருமை பொங்கப் பலமுறை கூறியிருக்கிறார்.
அப்படி குஷ்பூவின் மனதை மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்ட நபர், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தான். குஷ்புவின் பள்ளிக் காலத்தில் அவரது மனம் கவர்ந்த ஹீரோ என்றால் அது ரவி சாஸ்திரி மட்டுமே. சாஸ்த்ரியின் மேல் அப்படியொரு தீராக் காதலில் இருந்தார் குஷ்பு. பிடித்த கிரிக்கெட்டர் என்பதற்காக, குஷ்பு ஒன்றும் உடனடியாக அவரைச் சந்தித்து விடவில்லை. அதற்கு சூழலை முன்னிட்டுப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் கடந்த வாரம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ரவி சாஸ்திரி வந்தது தெரிந்ததும், குஷ்பூ ஒரேயடியாகக் குளிர்ந்து போனார். அதோடு மட்டுமல்லாமல் உடனடியாகக் கிளம்பிச் சென்று போட்டியை ரசித்து விட்டு, தனக்குப் பிரியமான ஹீரோவான ரவி சாஸ்த்திரியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கையோடு புகைப்படமும் எடுத்து, அதை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
அதனால குஷ்பூ இப்போ ரொம்ப, ரொம்ப ஹேப்பி!
No comments:
Post a Comment