Wednesday, September 20, 2017


மும்பையில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு!


By DIN  |   Published on : 19th September 2017 06:02 PM  | 
Mumbai_rains-


சென்னை: மும்பையில் இன்று மதியம் முதல் நாளை மதியம்  வரை பல பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, இன்று மதியம் முதல் நாளை வரை மும்பையில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பையில் கடைசியாக பெய்த கன மழையை விடவும் தற்போது மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.

மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகபட்சமாக 500 மி.மீ. மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
மும்பைவாசிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகம், கல்லூரி சென்றவர்கள் வீட்டுக்கு விரைவாக சென்று விடலாம். நாளை இரவு முதல் மழை படிப்படியாகக் குறைந்துவிடும். எனவே, நாளை மற்றும் நாளை மறுநாள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 21.12.2024