Sunday, September 17, 2017

அமெரிக்கா போக ஆசையா?- நிராகரித்தாலும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாமா?

Published : 15 Sep 2017 10:39 IST






அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவோர் விசா தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டியவை என்ன? மாதமொருமுறை உங்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார்கள் சென்னையில் உள்ள‌ அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரிகள்.

நான் தற்போது திருப்பூரில் இருக்கிறேன். அடுத்த 6 மாதங்களில் அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புகிறேன். இணையம் மூலமாக விசாவுக்கு விண்ணப்பிக்க முடியுமா அல்லது நேரடியாக சென்னையில் உள்ள‌ துணைத் தூதரகத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டுமா?

- ஆனந்த், திருப்பூர்.

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதில் அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளன. முதல் கட்டமாக, குடியுரிமை அல்லாதோர் விசாவுக்கான DS -160 படிவத்தை இணைய வழியில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பிறகு விசா கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அடுத்து கைரேகைப் பதிவுகளுக்கெனத் தனியாகவும் விசா நேர்காணலுக்குத் தனியாகவும் இருவேறு நேரப் பதிவுகளை (அப்பாயின்ட்மென்ட்) பெற்றிட வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய: http://www.ustraveldocs.com/in/in-niv-visaapply.asp

விசிட்டர் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது DS-160 என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமாமே? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

- சிவரஞ்சனி, கொடைக்கானல்.

ஆமாம். அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் DS-160 என்ற படிவத்தை இணைய வழியில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதில் இதுதான் முதல் படி. விண்ணப்ப நடைமுறைகள் சார்ந்த முழு விவரங்களை அறிய: http://www.ustraveldocs.com/in/in-niv-visaapply.asp

கடந்த 2016‍‍-ம் ஆண்டு நவம்பர் மாதம் என் பெற்றோர் B2 விசாவைப் புதுப்பிக்க விண்ணப்பித்தனர். அது இப்போதுவரை நிலுவையில் உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவரின் விசாவைப் புதுப்பிக்க எவ்வளவு காலம் ஆகும்?

- நடராஜன், திருச்சி.

ஒவ்வொரு விண்ணப்பமும் அவரவர் தனிப்பட்ட காரணங்களைச் சார்ந்தது. விசா நேர்காணலுக்குப் பிறகு 60 நாட்களுக்குள் பெரும்பாலும் விசா நிர்வாக நடைமுறைகள் முடிந்துவிடும். சில விண்ணப்பங்களுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படும். நிர்வாக நடைமுறையின் காரணமாக உங்கள் பெற்றோரின் விண்ணப்பம் இன்னமும் நிலுவையிலிருந்தால், விசா நேர்காணல் முடிந்து 60 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தால், support-india@ustraveldocs.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரம் கேட்டு அனுப்புங்கள். உங்கள் பெயர், விண்ணப்ப எண், தொடர்பு முகவரி, தொலைபேசி உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடுவது அவசியம்.


நான் என் தாத்தாவை அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புகிறேன். அவருக்கு வயது 86. முதியவர்களுக்கு ‘விசா வெய்வர்’ திட்டம் என ஒன்று உள்ளதாமே? அது குறித்து விளக்கம் தேவை.

- மானஸி, கோவை.

உங்கள் தாத்தாவுக்கு நேர்காணல் இல்லாமல் விசா வழங்கும் சலுகை கிட்டலாம். தற்போதைய அமெரிக்கக் குடியேற்றச் சட்டப்படி, சில வகை விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கெனவே விசா மறுக்கப்பட்டவர்களாக இல்லாதிருப்பின், இச்சலுகையைப் பெறலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய: http://www.ustraveldocs.com/in/in-niv-visarenew.asp#qualifications

நான் மூன்றாண்டுகளுக்கு முன்பு B2 விசாவுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், இரண்டு முறையும் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இப்போது, நான் F1 விசாவுக்கு விண்ணப்பிக்க உள்ளேன். ஏற்கெனவே எனது சுற்றுலா விசா நிராகரிக்கப்பட்டிருப்பதால், இப்போது நான் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமா?

- ரஞ்சித், திண்டுக்கல்.

அமெரிக்கக் குடியேற்ற மற்றும் குடியுரிமைச் சட்டம் விதி 214 (பி)-யின் கீழ், ஒரு முறை விசா நிராகரிப்பு என்பது, விசா பெறும் தகுதியை நிரந்தரமாக இழப்பதாகாது. உங்கள் பயணத் திட்டத்தையொட்டி, எப்போது வேண்டுமானாலும் அதே அல்லது வேறு விசா பிரிவின் கீழ் விசா கோரி நீங்கள் விண்ணப்பிக்கலாம். வேறு விசா பிரிவாக இருக்கும்பட்சத்தில், அதற்குரிய தகுதிகளை நீங்கள் பெற்றிருத்தல் அவசியம். F1 விசா பெறுவதற்கான தகுதி உள்ளிட்ட இதர விசா பிரிவுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய: travel.state.gov

நன்றி: அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...