Monday, September 4, 2017


விபத்தில் இருந்து தப்பிய சென்னை ரயில்
பதிவு செய்த நாள்
செப் 04,2017 11:51



குண்டூர்: ஆந்திர மாநிலம் விஜயவாடா - சென்னை இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
விஜயவாடாவில இருந்து இன்று ( செப்.,4) காலை, 6:00 மணிக்கு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்ட்டது. 30 நிமிடங்களில் தெனாலி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. அங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள மல்லிபாடு என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை, 'கேங்மேன்' கண்டுபிடித்து உஷார்படுத்தினார்.

இதையடுத்து, ரயில் இன்ஜின் டிரைவர் அவசரமாக பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தில் ரயில் தொடர்ந்து பயணித்து இருந்தால் பெரும் விபத்தில் சிக்கி இருக்கும். சரியான நேரத்தில் ஊழியர்கள் செயல்பட்டதால், அந்த விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாளம் சரி செய்யப்பட்ட பின், 8:00 மணிக்கு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024