Saturday, September 23, 2017

மானாமதுரையில் மர்மக்காய்ச்சல் பரவுகிறது சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு
பதிவு செய்த நாள்22செப்
2017
23:33


மானாமதுரை மானாமதுரை ஒன்றியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கெனவே 3 பேர் பலியான நிலையில் நேற்று ராஜகம்பீரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலியானார்.

மானாமதுரை ஒன்றியத்தில் தற்போது கடந்த 15 நாட்களாக ராஜகம்பீரம்,பீக்குளம்,காட்டுஉடைகுளம்,மேலப்பிடாவூர், கீழமேல்குடி,உட்பட பல ஊர்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் மானாமதுரை மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏ.பீக்குளம்
கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவர் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மதுரை தனியார் மருத்து
வமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.அதே போன்று காட்டு உடைகுளத்தில் 10 வயது
மருது என்ற பள்ளி மாணவனும்,65 வயது மூதாட்டி ஒருவரும் மர்மக் காய்ச்சலுக்கு பலியாயினர். 

இந்நிலையில் ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசண்முகம் 32 மனைவி பிரியா30,என்பவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.
இறந்து போன பிரியாவிற்கு 4 மற்றும் 3 ,1வயதில் மூன்று ஆண்குழந்தைகள் உள்ளனர்.

கிராமங்களில் பரவும் மர்மக்காய்ச்சல்:

மானாமதுரை ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன.தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கிராமங்களில் ஆங்காங்கே குப்பை அகற்றப்படுவதில்லை. சரியான வாறுகால் வசதியில்லாமல் வீடுகளின் முன்பு சாக்கடைநீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி கிராமங்களில் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் வசதி கிடைக்காமல் பலர் அசுத்தமான நீரை பருகுவதினாலும் பலருக்கு காய்ச்சல்,வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவதிக்குள்ளாகிவருகின்றனர்.இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதினால் மர்மக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
ஆகவே மாவட்ட நிர்வாகத்தினர் மானாமதுரை ஒன்றியத்தில் காய்ச்சல் பரவி வரும் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தி தீவிரமாக பரவிவரும் மர்மகாய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கிராம மக்களும்,சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து
வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024