Monday, September 4, 2017

மருத்துவ படிப்பு கிடைக்காவிட்டால் என்ன...

பதிவு செய்த நாள்04செப்
2017
12:38




சென்னை: 'மருத்துவ படிப்புக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், வாழ்க்கையில் சாதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன' என, தமிழக உயர் போலீஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிளஸ் 2வில் போதிய மார்க் இல்லை

ஐ.பி.எஸ்., அதிகாரியான டேவிட்சன் தேவாசிர்வாதம் கூறியிருப்பதாவது:
நான், 1985 - 86ம் ஆண்டு பிளஸ் 2 படித்தேன். சி.பி.எஸ்.இ., மாணவனான எனக்கு மற்றவர்களை போல, டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், அந்த ஆண்டு பிற நடவடிக்கைகள் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிசமான மதிப்பெண்களை பெறவில்லை. அத்துடன் மருத்துவ படிப்புக்கான போட்டி தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை. அந்த நேரத்தில், மீண்டும் பிளஸ் 2 தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனினும், அந்த எண்ணத்தை புறந்தள்ளிவிட்டு பட்டப்படிப்பில் சேர்ந்தேன். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு அது உதவும் என கருதினேன். அதற்கு ஏற்றார்போல், வரலாற்றில் இளம்கலை பட்டமும், சமூகவியலில் முதுகலை பட்டமும் பெற்றேன். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற, இது சிறப்பாக உதவி புரிந்தது. எஎன்னை போன்ற சராசரிக்கு மேற்பட்ட மாணவர்களே சிவில் சர்வீசஸ் பணியில் சேர முடியும் போது, பிளஸ் 2 தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்றவர்கள் சிவில் சர்வீசஸ் பணியில் கண்டிப்பாக சேர முடியும்.

மாற்று திட்டங்கள் தேவை

டாக்டராக வேண்டும் என்ற கனவில் இருந்த ஏராளமானோர் அதற்கு சம்பந்தமே இல்லாத பணியில் சேர்ந்து இருப்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. வாழ்க்கையில் எதுவும் நிச்சயம் இல்லை எனும் போது, மாற்று திட்டங்கள் வைத்து இருப்பது எப்போதும் நல்லது. இங்கு ஏராளமான பணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் டாக்டர் பணி. ஒருவர் ஒரு பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றால், அப்பணியில் சேர்ந்த பிறகே அதை செயல்படுத்த முடியும். அதுவரை எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்; எனினும், அந்த லட்சியத்தை நோக்கி பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...