Monday, September 4, 2017

சென்னை ஏர்போர்ட் - செங்கல்பட்டு மேம்பால சாலைக்கு ரூ.2,400 கோடி

பதிவு செய்த நாள்04செப்
2017
00:10

சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு வரை, மேம்பால சாலை அமைப்பதற்கு, 2,400 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அமைந்துள்ள திரிசூலம் பகுதியில் இருந்து, செங்கல்பட்டு வரை, ஜி.எஸ்.டி., சாலையில், மேம்பால சாலை அமைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. இதற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி, தனியார் ஒப்பந்ததாரரிடம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்நிறுவனம் அளித்த அறிக்கை அடிப்படையில், மேம்பால சாலை திட்டத்துக்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை விமான நிலையம் - செங்கல்பட்டு இடையே, 41 கி.மீ., தொலைவுக்கு மேம்பால சாலை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாராகி உள்ளது. இதன்படி, இத்திட்டத்துக்கு, 2,400 கோடி ரூபாய் செலவாகும் என, தெரிகிறது. விமான நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை ஒரு பகுதியாகவும், கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு வரை, ஒரு பகுதியாகவும், இத்திட்டம் மேற்கொள்ளப்படும். இதில், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில், சுங்கச்சாவடிகள் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024