Monday, September 4, 2017

காப்பியடித்தால் ரூ.50 ஆயிரம் : சென்னை பல்கலை எச்சரிக்கை
பதிவு செய்த நாள்04செப்
2017
00:07

சென்னை: 'மாணவர்களை காப்பியடிக்க அனுமதித்தால், கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை பல்கலை எச்சரித்துள்ளது.

சென்னை பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில், மாணவர்களை, ஒரு சில கல்லுாரி நிர்வாகமே காப்பியடிக்க அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சமீபத்தில் நடந்த தேர்வில், ஒரு கல்லுாரியைச் சேர்ந்த, நான்கு மாணவர்களின் கையெழுத்து, ஒரே மாதிரியாக இருந்துள்ளது.
ஒரு மாணவர், விடைத்தாளுடன், 500 ரூபாயை இணைத்துள்ளார். அத்துடன், மொபைல் போன் எண்ணையும் தெரிவித்துள்ள அந்த மாணவர், 'எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்' என, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சிண்டிகேட் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, மாணவர்களை காப்பியடிக்க அனுமதித்தாக, நான்கு கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

'இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, தேர்வு மையங்கள் அமைக்க அனுமதி ரத்து செய்யப்படும்' எனவும், சென்னை பல்கலை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

Retd prof sues firm for faulty car, wins ₹12 lakh refund

Retd prof sues firm for faulty car, wins ₹12 lakh refund  TIMES NEWS NETWORK 25.11.2024 Bengaluru : An automaker and its dealer in Yelahanka...