Wednesday, September 20, 2017

வாகனச் சோதனையில் போலீஸை கதிகலங்க வைத்த வாலிபர்!

எஸ்.தேவராஜன் க.பூபாலன்




வாகன சோதனையின்போது, வாகன ஓட்டி ஒருவர் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் என்.டி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போக்குவரத்து போலீஸார் நேற்று நள்ளிரவு செம்மண்டலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வில்லியனூரைச் சேர்ந்த இளையராஜா என்பவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பைக் ஓட்டிவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருடைய பைக்கை போலீஸார் பறிமுதல் செய்தனர். அப்போது இளையராஜா, தன்னுடைய பைக்கைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு போலீஸார், "நீ குடித்துவிட்டு இருக்கிற. இப்போது பைக்கை கொடுக்க முடியாது. வழக்கும் போட்டாச்சு. காலையில் கோர்ட்டில் ஃபைன் கட்டிவிட்டு பைக்கை எடுத்துகிட்டு போ" என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா, "உங்களை என்னச் செய்கிறேன் பார்" என்று மிரட்டும் தொணியில் தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால் திடீரென்று கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடனடியாக அவரைக் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024