Thursday, September 14, 2017

ரவுடிகளும், சமூக விரோதிகளும் ஊழியர்களாக நியமனம்: சுங்கச் சாவடிகள் முறையாக இயங்குவதில்லை - உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

Published : 14 Sep 2017 09:22 IST

மதுரை
தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் சுங்கச் சாவடி பணியாளர்களாக நியமனம் செய்கின்றனர். அவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை 67-ல் பெட்டைவாய்த்தலை முதல் குளித்தலை வரை சாலையில் இருபுறமும் மணல் லாரிகள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால், திருப்பராய்த்துறை, மனவாசி சுங்க மையங்களில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘சேலம் செல்லும் வழியில் திண்டுக்கல் - கரூர் சாலையில் அரவக்குறிச்சி சுங்க மையத்தில் அடையாள அட்டை கேட்டு தன்னை 20 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்ததாகவும், தனது காரில் தேசிய கொடி பறக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதி என முத்திரை இடம் பெற்றுள்ளது. இருப்பினும் தன்னிடம் அடையாள அட்டை கேட்டதாகவும்’ நீதிபதி கே.கே.சசிதரன் தெரிவித்தார்.

பின்னர், தேசிய நெடுஞ்சாலை குழுமத்தின் தலைமை பொது மேலாளர் மற்றும் கரூர்- திண்டுக்கல் சுங்க மையங்களை நிர்வகித்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டின் (டிகே) எக்ஸ்பிரஸ்வேஸ் மதுகான் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொது மேலாளர், அரவக்குறிச்சி சுங்கச் சாவடி பொறுப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, ‘தமிழகத்தில் சுங்க மையங்களில் ரவுடிகளும், சமூக விரோதிகளும் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலத்தவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழி தெரிவதில்லை. சுங்க மையங்களில் நீதிபதியையே நிறுத்தும்போது, சாதாரண மக்களின் நிலைமை பரிதாபகரமானது.

நடவடிக்கை எடுப்பதில்லை

இந்த விதிமீறல் தொடர்பாக சுங்க மைய ஒப்பந்ததாரர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை குழுமம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் சுங்க மையங்கள் முறையாக செயல்படுவதில்லை. கேரளாவில் சுங்க மையங்களில் முறைகேடு நடந்தபோது மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுத்த உதாரணம் உள்ளது.

தமிழகத்தில் சுங்க மையங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழியில்லை. நோயாளிகளுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024