Monday, October 23, 2017

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்

 சென்னையில்,இருந்து,சிங்கப்பூர்,செல்லும்,விமானம்,தாமதம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய பயணிகள் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 

சென்னையில் இருந்து இன்று (அக்.,22) காலை 11.30 மணி அளவில் சிங்கப்பூருக்கு செல்ல பயணிகள் தயாராக இருந்தனர். தொடர்ந்து பல மணிநேரமாகியும் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கால தாமதம் ஏற்படுவதாக புகார் கூறினர். 

விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏர் இந்தியா விமானத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி விஜயராகவன் கூறுகையில் பயணிகளுக்கு தங்கும் இட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதாகவும், நாளை (அக்., 23 ) காலை 9 மணிக்கு பயணிகள் சிங்கப்பூர் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...