Sunday, October 1, 2017

பைக்கில் சென்ற ராவணனுக்கு அபராதம்



புதுடில்லி: தலைநகர் டில்லியில், ஹெல்மட் அணியாமல் கிரீடம் அணிந்து பைக்கில் சென்ற ராவணன் வேட நடிகருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில், ஆண்டுதோறும் நவராத்திரியை ஒட்டி ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், ராவணன் வேடத்தில் நடித்த முகேஷ் ரிஷி, ராவணன் தோற்றத்தில் கிரீடம் அணிந்தபடி டில்லி சாலைகளில் பைக்கில் பயணம் செய்தார். இந்த படம் சமூக வலை தளங்களில் வெளியானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். போக்குவரத்து போலீஸ் அலுவலகத்திற்கு நேரில் சென்ற முகேஷ் ரிஷி, அபராதத்தை செலுத்தினார் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Dailyhunt

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...