Sunday, October 1, 2017

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: தினகரன் வழங்கினார்
By DIN | Published on : 30th September 2017 03:03 PM |



அரியலூர்: மருத்துவர் கனவு நனவாகாததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குடும்பத்துக்கு அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், ரூ.15 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் உடன் சென்றார். இரு தலைவர்களும் அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆசி கூறினர். பிறகு, அனிதாவின் குடும்பத்தாரிடம் ரூ.15 லட்சத்தை அளித்தார் டிடிவி தினகரன்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அனிதா விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக எதையும் செய்யவில்லை. அனிதா வீட்டிற்கு திருமாவளவன் என்னுடன் ஆறுதல் கூற வந்ததில் அரசியல் எதுவும் இல்லை. நாங்கள் அழைத்ததால் அவர் வந்துள்ளார் என்று கூறினார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...